No posts.
No posts.

ஏனுங்க இது நம்மூரு பக்கம் நடக்குமா!!??

கம்ப்யூட்டர் என்னவெல்லாம் செய்யும் என்று நமக்கு தெரியும், ஆனால், நீதிபதிக்கு பதிலாக கோர்டில் குறிப்பிட்ட வழக்கில் கம்ப்யூட்டர் தீர்ப்பு சொல்லும் என்பது நம்மை வியக்க வைக்கிறது. ஆனாலும், உண்மையாக நடந்திருக்கிறது.சீனாவில் ஜீசுவான் என்ற மாவட்டத்தில் இந்த அதிசயம் நடந்திருக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு என்ற நுõறு விதமான குற்றங்கள் பற்றி கம்ப்யூட்டரில் ஸ்பெஷல் சாப்ட்வேர் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.நீதிபதி செய்ய வேண்டியது எல்லாம் இது தான் குறிப்பிட்ட வழக்கைப் பற்றிய எல்லா விவரங்களையும் கம்ப்யூட்டருக்குள் செலுத்த வேண்டியது. குறிப்பிட்ட குற்றத்திற்கு என்ன தண்டனை என்று சரியான தீர்ப்பை கம்ப்யூட்டர் அளித்து விடும். என்ன தண்டனை, எவ்வளவு சிறை வாசம், எவ்வளவு அபராதம் என்று கம்ப்யூட்டர் சொல்லி விடும்.நீதிக்கு புறம்பாக இனி சில நீதிபதிகள், லஞ்சம் பெற்றுக் கொண்டு எதுவும் செய்து விட முடியாது என்று இந்த ஏற்பாட்டை பலர் வரவேற்கின்றனர். சிலர் நீதியின் சோம்பேறித்தனம் என்கின்றனர்.நன்றி - தினமலர்

தியானம்

எல்லாவற்றையும் தவிர்க்கும் சக்தியைக் கொடுப்பதுதான் தியானம். “பார் அங்கே..அதோ ஒரு அழகான பொருள்” என இயற்கை கூறுகிறது. “கண்களே பார்க்காதீர்கள்!” என்று நான் கண்களுக்கு உத்தரவிடுகிறேன். கண்கள் பார்ப்பதில்லை. “இதோ நல்ல நறுமணம், இதை முகர்ந்து பார்” என இயற்கை கூறுகிறது. “அதை முகராதே!” என நான் என் மூக்கிற்கு உத்தரவிடுகிறேன். மூக்கு அதை முகர்வதில்லை. இயற்கை ஒரு கொடிய காரியம் செய்கிறது. என் குழந்தைகளில் ஒன்றைக் கொல்கிறது.“இப்போது என்ன செய்வாய்? மடையா உட்கார்ந்து அழு. துக்கத்தின் ஆழத்திற்குப்போ!” என்று இயற்கை சொல்கிறது. ஆனால் நான் சொல்கிறேன், “நான் போக வேண்டிய அவசியம் இல்லை!” என்று குதித்து எழுந்து சுதந்திரமாக இருக்கவேண்டும். இதைப் பயிற்சி செய்து பாருங்கள். ஒரு நொடையில் தியானத்தில் இந்த இயற்கையை நீங்கள் மாற்ற முடியும். இந்த சக்தி உங்களுக்குக் கிடைத்தால் அதுவே பரலோகமாகாதா? சுதந்திரமாகாதா? தியானத்தின் சக்தி அதுதான்

ஞானதீபம்

ஓ மனிதா! இதை நம்பு. உள்ளத்தில் இதை ஊன்றச் செய். மாண்டவர் மீள்வதில்லை. கழிந்த இரவு வருவதில்லை. வீழ்ந்த அலை எழுவதில்லை. ஒரு முறை பெற்ற உடலை மீண்டும் மனிதன் பெறுவதில்லை. எனவே, ஓ மனிதா இறந்துபோன பழங்கதையை வணங்காதே! வா இங்கு வாழும் நிகழ்காலத்தை வனங்கு. சென்றதை நினைத்து புலம்பாதே. இன்று உள்ளதைக் கண்டு அதில் பங்கு கொள். அழிந்துபோன கரடு முரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்காதே. உன்னருகே உள்ள புதிய செப்பனிடப்பட்ட நன்கு வகுக்கப்பட்ட ராஜபாதையில் செல். வா! உன்னை அழைக்கிறோம்.அன்புள்ளவன் இதை அறிந்து கொள்வான்!

மனதை அடக்கு

எல்லா பேய்களும் நம்முடைய மனத்திலேதான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கி இருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும். மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்கவேண்டும் என்பது மட்டும் நமக்கு தெரிந்து இருந்தால் உலகம் தனது ரகசியங்களை வெளியிடத் தயாராக இருக்கிறது. அத்தகைய வலிமையும் தாக்கும் வேகமும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. மனதை ஒருமுகப் படுத்துபவனுக்கே இந்த வலிமை கிட்டும். மனித உள்ளத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.